ஆண்களுக்கு ஆபத்து? வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்!


ஆண்களுக்கு ஆபத்து? வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்! ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருவதால், பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களுக்காக வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தை மாதம் முதல் தேதியே அமாவாசையாக உள்ளதால் ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தங்கள் வீட்டில் உள்ள கணவர், சகோதரர், தந்தை, மகன் போன்றவர்களுக்காக பெண்கள் வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளின் முன் விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. மேலும் ஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கின்றார்களோ அத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் என்றும் வதந்தி பரவி வருவதால் ஒரே வீட்டில் பல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தோன்றிய இந்த வதந்தி ஒருசில மணி நேரங்களில் காட்டுத்தீ போல் பரவி சென்னை வரை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாதம்: ஆண்களுக்கு ஆபத்தா?

தமிழ் புத்தாண்டான தை மாதம் அமாவாசை அன்று பிறந்துள்ளதால், ஆண்களுக்கு ஆபத்தாக அமையும் என்று சிலர் வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக மனைவிமார்கள், கணவர்களுக்காக கோவிலுக்கு சென்று வருவதும், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பதும் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆண்களுக்கு ஆபத்து என்று நெல்லை மாவட்டத்தில் வதந்தி பரவியதால், அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி மனைவிகள் தாலி கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *