அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக கட்டினார்கள்.?


அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக கட்டினார்கள்.?
மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்.
“டேய் நாதஸ். எங்கடா வேகாத வெயில்ல வெந்த வெந்தயமா ஓடுற? இங்க வந்து நான் நலந்தானா வாசிக்கிறதக் கேளுடா….”
படக்கென நின்று மூச்சு விட்டபடியே பேசுகிறார் செந்தில். “அண்ணே, முக்கியமான வேலையாப் போறேன். தடுக்காதீங்கண்ணே!”
“(சத்தமாக) ஆமா…..இவரு புருனே சுல்தானு. தங்கத்தக் கொட்டி வெக்க எடமில்லாம தேனிக்குப் பக்கத்துல இருவது ஏக்கரா நெலம் வாங்கப் போறாரு. நில்றா….கிட்டக்க வா மகனே மொதல்ல.” பக்கத்தில் போகிறார். “வந்துட்ட்ட்டெண்ணே”
“(மெதுவாக) ஆமா..இவரு பெரிய அப்துல் கலாம். வந்ததும் வரவேற்கனுமாக்கும். (சாதாரணமாக) இப்பிடி வேர்க்க விறுவிறுக்க எங்க ஓடுற?” தபதபவென இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டே…”அது வந்துண்ணே…அருணா….கொடி…”

“என்னதுதுதுதுதுது! அருணாவா? யாரு வெள்ளாவிக்குத் துணியெடுக்க வருவாளே அந்தக் கொடியிடை அருணாவா?” கவுண்டரின் பேச்சிலும் முகத்திலும் மலர்ச்சி தெரிகிறது. “ஐயோ…ஏந்தா இப்பிடி இருக்கீங்களோ” தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். “அருணாக்கொடிண்ணே அருணாக்கொடி. இடுப்புல கட்டுற கருப்புக் கயிறுண்ணே.” கவுண்டரின் மூஞ்சி மாறுகிறது. நா தழதழத்துக் கொண்டே “ஏண்டா! இடுப்புல கட்டுற கயித்துக்குப் பேரு அருணாக்கொடியாடா? போன வாரம் இப்பிடித்தான் அந்த நோஞ்சா மூஞ்சி முருகேசு வந்து அண்ணாக் கயிறு வாங்கப் போறேன்னு சொன்னான். கட்சியில எதுவும் சேந்துட்டியா கண்ணான்னு கேட்டா ஒரு மாதிரி பாத்துட்டுப் போறான். வேண்டாம்டா…விட்டுருங்கடா!” மிடுக்காக விரலை உயர்த்திச் சொல்கிறார் செந்தில். “அண்ணே நீங்க ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கனும். அருணாக்கொடியும் அண்ணாக்கயிறும் ஒன்னுதாண்ணே. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையேண்ணே. எப்படிப் பொழைக்கப் போறீங்களோ?” “என்னது அடிப்படையா? அதெல்லாம் ஒனக்குத்தானடா பூந்தி வாயா! எனக்கேதுடா அடிப்படையும் சொறிப்படையும்! ஏதோ இந்த மேளம் இருக்கக்கண்டு பொழச்சுக்கிறேன்.”

“சரிண்ணே…நீங்க இதையே டொக்கு டொக்குன்னு தட்டுங்க. நான் போய் அருணாக்கொடி வாங்கீயாரேன்.”
சற்று ஆத்திரத்தோடு. “டேய் நில்லு. திரும்ப இன்னொருவாட்டி அருணாக்கொடி அண்ணாக்கயிறுன்னு ஒளறுன நாக்க அறுத்து எலிக்குப் போட்டுருவேன். அது அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிறு. புரிஞ்சதா?”
“அண்ணே. அதை அருணாக்கொடின்னும் சொல்லலாம். அண்ணாக்கயிறுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே.” சொல்லி விட்டுக் கெக்கே பெக்கே எனச் சிரிக்கிறார் செந்தில். கவுண்டர் கடுகடுப்பாகிறார். செந்தில் தோளில் கை வைத்து உட்கார வைக்கிறார். “நாதஸ். இந்த அண்ணாக் கயிறு, தங்கச்சிக் கயிறு, தம்பிக் கயிறு எல்லாத்தையும் விட்டுரு. நான் நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. அரைனா இடுப்பு. எங்க சொல்லு.” “ஐயோ அண்ணே. அரைன்னா இடுப்பா..ஹெக்ஹெக்ஹெக். அரைன்னா அரையறுதுன்னே. அதுல நீங்க எஸ்பேட்டாச்சே. அரைன்னா அரையறுது. அறையின்னா ரூம்புன்னே.” “அடேஏஏஏஏஏஏய். வாய மூடு. இதுக்கு மேல ஏதாவது பேசுன…….(கோவத்தைக் கட்டுப்படுத்துகிறார்.) இங்க பாருப்பா.

சுந்தரரு என்ன சொல்லீருக்காரு?” “என்ன சொல்லீருக்காரு?” “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்துன்னு சிவபெருமானைப் பத்திப் பாடியிருக்காரு.” “அண்ணே ஒரு சந்தேகம்னே. சிவபெருமான் புலித்தொலியக் கொண்டு யாரண்ணே அரஞ்சாரு?” “இப்ப நாந்தான் ஒன்ன அரையப் போறேன். முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா. பொன்னார் மேனியன்னா….தங்கம் போல பளபளன்னு இருந்தாராம் சிவன். புலித்தோலை அரைக்கிசைத்துன்னா…இடுப்புல புலித்தோலைக் கட்டியிருந்தாராம். இசைத்துன்னா கட்டிக்கிறதுன்னும் சொல்லலாம். அதுல வர்ர அரைக்கு இடுப்புன்னு பொருள். அப்படி இருப்புல கட்டுற கயித்துக்குத்தான் அரைஞாண்னு பேரு. பின்னூட்டங்கள மொதல்ல படி. அதுல ஜெயஸ்ரீ ஞாண்னா கயிறுன்னு அழகா எடுத்துச் சொல்லீருக்காங்க பாரு. இடுப்புக்கான கயிறு அரைஞாண். புரிஞ்சதா?” தலையை ஆட்டுகிறார் செந்தில். “புரிஞ்சிருச்சின்னே. நீங்க தெய்வம்னே. இந்தத் தமிழு எங்கிருந்துண்ணே வந்துச்சு.” கவுண்டரின் முகம் பெருமிதப்படுகிறது. “டேய். அதெல்லாம் மதுரைல இருந்து நேரா டாக்சி வச்சிக்கிட்டு வர்ரது. நான் என்ன மெயில்ல ஜிரா சொல்றதக் கேட்டா தெரிஞ்சிக்கிறேன். தானா வர்ரது.

போறது. ஹெ ஹெ ஹெஹ்ஹஹே.” “சரின்னே நான் கடைக்குப் போயி அரைஞாண் வாங்கியாந்துர்ரெண்ணே.” கையசைத்து விடை கொடுக்கிறார் கவுண்டமணி. சிறிது நேரம் கழித்து செந்திலை ஒரு கூட்டமே துரத்திக் கொண்டு வருகிறது. தலை தெறிக்க ஓடுகிறார் செந்தில். துரத்தியோடும் ஒருவனை நிறுத்திக் கேட்கிறார். “ஏம்ப்பா இப்பிடி அவனத் தொரத்துறீங்க?” “அந்தக் கொடுமைய….இவன் கடைக்குப் போயி அரைஞாண்னு என்னவோ ஒரு கயிறக் கேட்டிருக்கான். கடையில இருந்த பெருசு…இவன் ஏதோ சூனியம் வெக்க கயிறு கேக்குறான்னு ஊரக் கூட்டீட்டாரு. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கேட்டது அருணாக்கொடின்னு. அத ஏன்டா அரைஞான் கயிறுன்னு சொல்றன்னு கேட்டா…..தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான். அதான்ன தொரத்துறோம்.” சொல்லி விட்டு ஓடுகிறார் துரத்துகிறார். கவுண்டமணி முகத்தை ஒரு பக்கமாக இழுத்தாற்போல வைத்துக் கொள்கிறார். கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *