அமலாபாலுக்கு 7 ஆண்டு சிறை ஏன் தெரியுமா ?


அமலாபாலுக்கு 7 ஆண்டு சிறை ஏன் தெரியுமா ? சென்னை: முன்னணி நடிகையான அமலா பால் போலி முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை கிடைக்குமாம்.மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். பின்னர் தெய்வ மகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க-2. வேலையில்லா பட்டதாரி -2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.திரைக்கு வராத பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். கேரளத்தை சேர்ந்த இவர் சென்னையில் ரூ. 1.12 கோடிக்கு எஸ். கிளாஸ் பென்ஸ் கார் வாங்கினார். இந்த கார் போலி முகவரி மூலம் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள வாகன சட்டப்படி அந்த மாநிலத்திலும் அமலாபால் முறைப்படி வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலா பாலுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவின்றன. இதனால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…

முஸ்லிம் பெண்ணாக மாறும் அமலாபால்!!

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ராம் குமார் என்பவர் இயக்க இருக்கின்றார்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *